"இந்தியாவுக்கு ஆபத்து?".. அமெரிக்க நிபுணர் எச்சரிக்கை..!!!!

Keerthi
2 years ago
"இந்தியாவுக்கு ஆபத்து?".. அமெரிக்க நிபுணர் எச்சரிக்கை..!!!!

தென்ஆப்பிரிக்காவில் முதல் முறையாக கண்டறியப்பட்ட 'ஒமிக்ரான்' வைரஸ் இந்தியா உட்பட 100-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி பீதியை கிளப்பியுள்ளது.

இதனால் சர்வதேச பயணிகள் அனைவருக்கும் 7 நாட்கள் கட்டாய தனிமைப்படுத்துதல் உள்ளிட்ட கட்டுப்பாடுகளை விதித்து மத்திய அரசு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில் அமெரிக்க சுகாதார நிபுணர் ஒருவர் இந்தியாவில் அடுத்த மாதம் ஒமிக்ரான் வைரஸ் உச்சம் அடையும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அமெரிக்காவின் வாஷிங்டன் பல்கலைக்கழகத்தின் சுகாதார அளவீட்டு அறிவியலின் தலைவரான டாக்டர் கிறிஸ்டோபர் முர்ரே "உலகில் உள்ள பல்வேறு நாடுகளில் ஏற்பட்டுள்ளது போலவே இந்தியாவிலும் ஒமிக்ரான் அலை வீசும்" என்ற பரபரப்பு தகவலை கூறியுள்ளார். மேலும் இந்தியாவில் ஒமிக்ரான் உச்சம் அடையும் போது தினசரி பாதிப்பு 5 லட்சமாக இருக்கும் என்று எச்சரித்துள்ளார்.

மேலும் இந்திய செய்திகளுக்கு இதில் கிலிக் செய்யுங்கள்.